சென்னையின் சாலைகளில் வரைமுறையில்லாத டிராபிக்குக்கு அடுத்தபடியாக நாம் உஷாராக இருக்க வேண்டியது வரைமுறை இல்லாமல் எச்சில் துப்புகிறவர்களிடம் தான்.
சென்னையில் டூ வீலர் ஓட்டுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு தனித் திறமை உண்டு. பக்கவாட்டில் ஒரு பைக் கிராஸாகி அடுத்த வண்டி கடக்கும் நொடிப் பொழுதில் வண்டியின் வேகத்தை கொஞ்சம் கூட குறைக்காமல் சைடில் திரும்பி புளிச்சென எச்சில் துப்புவதில் சமர்த்தர்கள் இவர்கள்.
இதற்கும் மேல், டிராபிக்கிலோ சிக்னலிலோ சென்னை மாநகர பேருந்துகளின் அருகில் போய் நிற்க நேர்ந்தால் மிகுந்த உஷாராக இருக்க வேண்டியது அவசியம். எந்த நேரத்திலும் எந்த ஜன்னலில் இருந்தும் எச்சில் தாக்குதல் நடக்கலாம்.
ஒரு முறை நான் வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த போது எனக்கு முன் பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருத்தர் மேலே சொன்ன மாதிரி (எச்சில்) தாக்குதல் நடத்தினார். அதிலிருந்து மயிரிழையில் தப்பினேன். எனக்கு சரியான கோபம். அவரை ஓவர்டேக் பண்ணி அவரை மடக்கி நிறுத்தினேன். கோபம் குறையாமல் " யோவ் உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..... இப்டி எச்ச துப்பறியே பின்னால வரவங்க மேல படும்னு தெரியாதா " என்று கத்தினேன். அந்த ஆள் என்னடாவென்றால் பதிலுக்கு என் மேல் எகிற ஆரம்பித்து விட்டார். நான் எச்சில் துப்புற போது நீ ஏன்யா குறுக்க வந்த? என்கிற ரீதியில் நியாயம் பேச ஆரம்பித்து விட்டார்.
நம் மக்களின் Road Sense ஐ நினைத்து புல்லரித்த படியே அந்த இடத்தை விட்டு அகன்றேன்.

No comments:
Post a Comment