வத்திக்குச்சி படத்தின் பாடல்களைப் பற்றிய எனது கருத்து மட்டுமே இது.
சாதாரணமாகத் திரைப்பாடல்களைக் கேட்கும் போது ஒரு பாமரனின் மனதில் என்ன
தோன்றுமோ அதன் எழுத்து வடிவமே எனது இப்பதிவு.
வத்திக்குச்சி :
வாகை சூட வா படத்தில் பிரஷ்ஷான இசையைத் தர முயன்று அதில் பெரிதளவு வெற்றியும் பெற்ற புது இசையமைப்பாளர் கிப்ரானின் இசையில் பெரிய இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ஆல்பம்.
1 . குறு குறு கண்ணாலே :
முதல் கேட்பிலேயே சட்டென கவனம் ஈர்க்கும் ஹாரிஸ் ஜெயராஜ் வகையறா பாடல்.பாடலின் ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பைக் கடைசி வரை குறையாமல் கொண்டு சென்றதற்கு கிப்ரானுக்கு ஒரு சபாஷ். பல முறை கேட்க வைக்கும் டியூன். கண்டிப்பாக அடுத்த சில நாட்களுக்கு உதடுகள் இப்பாடலை முணுமுணுக்கும் சாத்தியங்கள் உண்டு. ரேட்டிங் - 6 / 10
2 . அம்மா வேக் மீ அப் :
பாடல் வரிகளைக் கேட்கும் போது தமிழ் சினிமாவின் சாம்பிரதாயங்களில் ஒன்றான கதாநாயகியின் அறிமுகப் பாடல் போலத் தோன்றுகிறது.அதிலும் தன்னால் இயன்ற வரை புதிதாக முயற்சித்திருக்கிறார் கிப்ரான்.சாதாரணமாக இம்மாதிரி பாடல்களுக்குப் பயன்படுத்தாத இன்ஸ்ட்ருமெண்ட்களை உபயோகித்ததன் மூலம் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். ரேட்டிங் - 5 / 10
3 . கண்ண கண்ண :
ஆல்பத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல்."சர சர சாரக் காத்து" சாயலிலேயே தொடங்கும் பாடல் சட்டென்று தடம் மாறி வேறு வடிவமெடுக்கிறது. பாடகர் சுந்தர் நாரயண ராவ் குரலில் பல வித்தைகள் . வடிவமைத்த கிப்ரானுக்கு அப்ளாஸ். Loop ல் தொடர்ந்து கேட்டபடியே இருக்கிறேன்.இன்னும் சில நாட்களுக்கு கண்டிப்பாக அதிகம் கேட்கும் பாடலாக இருக்கும். ரேட்டிங் - 8 / 10
4 . அறி உன்னை :
கதாநாயகன் எழுச்சி கொண்டு வில்லன்களை துவம்சம் செய்ய புறப்படும் போதோ அதற்குத் திட்டம் தீட்டும் போதோ வரும் பாடல் என்று தோன்றுகிறது . புது முயற்சிகள் செய்ய பெரிய வாய்ப்பில்லாத வகைப் பாடல். இயன்ற வரை தன் பாணியில் அதற்கு நியாயம் செய்திருக்கிறார் கிப்ரான். ரேட்டிங் - 5 / 10
5 . வத்திக்குச்சி தீம் :
எல்லா ஆக் ஷன் படங்களிலும் இடம் பெறும் தீம் மியூசிக்கைப் போலவே சம்பிரதாயமான Template ஐ பயன்படுத்தியிருக்கிறார் கிப்ரான்.முதலில் மிக மெதுவாகத துவங்கி பிறகு எக்ஸ்பிரஸ் வேகமெடுக்கும் அதே கேட்டுப் பழகிய ஆக் ஷன் தீம். பெரிதாக சொல்வதற்கு வேறொன்றுமில்லை. ரேட்டிங் - 4/ 10
பி. கு : வாகை சூட வா ஆல்பம் போலவே இதிலும் எல்லாப் பாடல்களுக்கும் கரோகே டிராக்கை ஆல்பத்தில் இணைத்துள்ளார் இசையமைப்பாளர். வரவேற்கத் தகுந்த முயற்சி. எல்லாப் படங்களிலும் தொடரட்டும்.

No comments:
Post a Comment